தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு வழமைபோன்று அமுலில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, 23ஆம் திகதி இரவு பத்து மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடானது 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வழமை போன்று இரவு 11 மணியிலிருந்து மறுநாள் காலை 4 மணிவரையிலான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் மக்கள் ஒன்று கூடுதல் நிகழ்வுகளை நடத்துதல், விருந்துபசாரங்களை நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்தைகளை திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி