கல்கிஸை பகுதியில், இணையத்தை பயன்படுத்தி 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பம் தொடர்பில் முன்னதாக சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 26 வயது பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சிறுமி சுமார் 04 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டு பல்வேறு நபர்களுக்கு பாலியல் நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

அவ்வாறு சிறுமியை குறித்த நபர்களின் இடங்களுக்கு அழைத்துச்சென்றமை தொடர்பில் ஜம்புரலிய மடபாத பகுதியை சேர்ந்த பெண் நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி