வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போதும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வதை ஊடக காணொளிகள் மூலம் காணக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர்களின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுவதாக பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது இவ்வாறான செயல்களை தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறித்த சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் பதிவானால் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி