இலங்கையின் நிலைமை தீவிரமடைந்து வருவதால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமெரிக்க குடிமக்களை எச்சரித்துள்ளது.

அமெரிக்கா இப்போது கொவிட் பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மற்றும் இரட்டை குடியுரிமை பெற்ற குடிமக்கள் முகக்கவசம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ சமீபத்தில் இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கு முன்பு அமெரிக்கா சென்றார். முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷவும் தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பால் அமெரிக்க பிரஜைகளான இவர்களுக்கு இலங்கைக்கு திரும்புவதில் சிக்கல் உள்ளது.

அரசாங்கத்தின் நிலை:

இலங்கை மீது அமெரிக்கா நான்காவது நிலை சுற்றுலா தடையை விதிப்பது நீண்ட கால செயல்முறை அல்ல என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான வைத்தியர் ரமேஷ் பதிரன கூறுகிறார்.

நான்காவது நிலை பயண கட்டுப்பாடு என்பது கொவிட் தொற்று பரவலாக இருப்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோலாகும்.

இதற்கிடையில்,கொவிட் -19பரவலை கருத்தில் கொண்டு அமெரிக்கா நேற்று (25) ஜப்பானுக்கு நான்காவது நிலை பயணத் தடையை விதித்தது.

அதன்படி, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அந்நாட்டின் குடிமக்களுக்கு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொவிட் வைரஸ் பரவுவது தொடர்பாக அமெரிக்கா நேற்று தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

usa1


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி