சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.

இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

COVID-19 தொற்று நிலைமை காரணமாக இந்தியா எதிர்நோக்கியுள்ள நிலைமை தொடர்பில் பெரும் கவலை அடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் நலன் வேண்டி இலங்கையின் மகா சங்கத்தினர் ஊடாக ரத்தன சூத்திரத்தை பாராயணம் செய்வதற்கு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி