வவுனியா – செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தாக்கியதால் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்குச் செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும், தாக்கிய

நபருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வன்முறையாளர்களால் அரச ஊழியர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும், அரச உத்தியோகத்தர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு கடும் சட்டத்தினை அமுல்படுத்து போன்ற விடயங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளர் கு.சுலோஜனாவிடம் மகஜரொன்றினையும் கையளித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி