இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காக, அரச காணிகளில் மூதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்களின்  தொழில் முயற்சி ஆற்றல்கள் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை (30) பொத்துவிலில் இடம்பெற்றது.

பொத்துவில் பிரதேச செயலகத்தில்  காணி பயன்பாட்டு அலுவலகர் ஞா.கலாரஞ்சனின் ஏற்பாட்டில்  பிரதேச செயலகத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொத்துவில் பிரதேசத்திலிருந்து 1870இளைஞர் யுவதிகள் விண்ணப்பித்து இருந்ததுடன், நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

அரசு  இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக, காணிப் பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களம் இவ்வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

இந்நேர்முகப் பரீட்சையினை பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்,  உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜனூஸ்,  காணிப்பிரிவு சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் அப்துல் வாசீத்,  காணிப் பயன்பாட்டு அலுவலகர்  மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  நேர்முகப் பரீட்சையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி