அரசாங்கத்திற்குள் உள்ளக நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்றும் இராஜங்க அமைச்சர் நாலக கொடகேவா தெரிவித்துள்ளார்.

அவர் கம்பஹாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்

சிலர் அரசாங்கத்தில் நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது என்றும், ஒரு அரசாங்கத்திற்கு தகுதியான மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமது சொந்த முகாமில் உள்ளவர்கள் இன்று வியத்மகவை திட்டுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய இராஜாங்க அமைச்சர், நாட்டில் நடக்கும் எல்லாவற்றிற்கும் வியத்மகவைக் குறை கூறக்கூடாது என்று தெரிவித்தார்.

தேசபக்தி முகாமின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்குள் உள்ளக மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் கூறினார்.

 

ஒருவருக்கொருவர் எதிரான 'ஹூ' நிலைமை!

இப்போது, ​​அரசாங்கத்தில் இரண்டு முகாம்கள் உள்ளன பசில் சார்பு,பசில் எதிர்ப்பு, இது விமல் பிரிவு மற்றும் பசில் பிரிவு என சமூகமயமாக்கப்பட்டுள்ளது.

மார்ச் 27 கிரிந்த சன சமூக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து விமல் வீரவன்சவுக்கு 'ஹூ' சப்தம் போட்டுள்ளனர்.

இது பசில் பிரிவினரின் திட்டமிட்ட சதித்திட்டமாக இருக்கலாம் என்று அரசாங்கத்தில் சிலர் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி