விமான பயணிகளின் பி.சி.ஆர் சோதனைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளாமல், ஒரு தனியார் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறித்து நாட்டின் முன்னணி சுகாதார நிபுணர்களின் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

”விமான நிலைய ஆய்வகத்திற்கு வரும் பணம் அறவிடும் அனைத்து பரிசோதனைகளும் ஒரு தனியார் வைத்தியசாலைக்குச் செல்கின்றன."  என நேற்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சிலர் விமான நிலையத்தில் உள்ள ஆய்வகத்தை மூடிவிட்டு அங்கு பிற வணிக ஆய்வகங்களை அமைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

”ஒரு வெளிநாட்டு ஆய்வகத்தை அமைத்து, அதற்காக சுமார்  35 டொலர்களை செலுத்த முயற்சிக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தினமும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு 80 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது என  ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஆய்வகங்களில் நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 2,500-3,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், பி.சி.ஆர் சோதனைகளுக்கு பத்து மில்லியன் ரூபாயைக் கூட செலவிட எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுமாயின், சுமார் 10 மில்லியன் ரூபாயை சம்பாதிக்க முடியும் என தொழில்முறை வைத்தியர் வலியுறுத்துகிறார்.

"விமான நிலைய ஆய்வகத்தில் இன்று 100 மில்லியன் மதிப்புள்ள உபகரணங்கள் வெறுமனே கிடக்கின்றன. இதைப் பயன்படுத்த முடியாது. அதை பொருத்தவும் முடியாது. அது குறித்து சுகாதார அமைச்சு எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.”

3,000 முதல் 4,000 வரையான விமான பயணிகளின், பி.சி.ஆர் பரிசோதனைகள் தனியார் ஆய்வகத்தில் தினமும் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ரவி குமுதேஷ் ஒரு சோதனைக்கு ஐம்பது டொலர்கள் வரை  செலவாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆய்வக சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டு, அந்த பணத்தை தனியார் துறைக்கு வழங்குவது நகைப்புக்குரியது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி