கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அதிகாரிகள் இன்று (24) அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

ஆலய வளாகத்திற்குள் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதேவேளை வட மாகாண தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அடங்கிய குழுவினர் காலை 11 மணியளவில் உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள சமூகமளித்திருந்தனர்.

அதற்கு பொதுமக்கள் வீதியை மறித்து, அவர்களை உள்ளே செல்ல விடாது கோசங்களை எழுப்பியவாறு தடுத்து நின்றதோடு, வரலாற்றை மாற்றாதே, மனங்களில் புத்தரை தேடு, மண்ணில் புத்தரை தேடாதே, எங்களது சிவன் எங்களுக்கு வேண்டும், போன்ற கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

 

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி