அனைத்துலக காச நோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக 

இந்நாளை அனைத்துலக காச நோய் தினமாக பிரகடனப்படுத்தியது.

காசநோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ஆம் திகதி, சர்வதேச காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காசநோய் (டியூபர்குலோசிஸ்) என்பது மைக்கோபாக்டீரியம் என்னும் நுண்ணுயிரியின் தாக்குதலால் ஏற்படும் கடும் தொற்று நோயாகும்.

தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பக வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை காசநோய்க்கான அறிகுறிகளாக இனங்காணப்பட்டுள்ளன.

இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம்.

ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளாகும். காசநோய் உள்ளவர்கள் தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வதால் இந்நோயில் இருந்து குணமடையலாம்.

அவ்வகையில் அனைவரும் இன்றைய கால கட்டத்தில் கொரோனாவுடன் காசநோய் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி, மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி ஜெர்மனி மருத்துவ விஞ்ஞானி ​ெராபர்ட் காஹ் என்பவர் காச நோயை உண்டாக்கும் பசிலஸ் என்ற நுண்ணுயிரியை கண்டறிந்தார். அந்தக் காலத்தில் மருத்துவ உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு இது.

ஆண்டுதோறும் புதிதாக 90 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காசநோய் பரவுகின்றது. இந்த நோயால் ஆண்டுதோறும் 17 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காச நோய் எனப்படும் ரி.பி. ஒரு காலத்தில் இன்றைய கொரோனா போன்ற உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய். இன்றைக்கும் இந்த நோய் பரவும் முறைகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கும் குறைவில்லை. ஆனால், அந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இப்போது இருப்பதுதான் ஒரே மாற்றம்.

ரி யூபர் செல் பசிலஸ் அல்லது ரியூபர் குளோசிஸ் என்பதன் சுருக்கம்தான் ரி.பி. அக்காலத்தில் வீட்டில் உள்ள ஒருவருக்கு இந்நோய் வந்தால், மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலை இருந்தது. இன்றோ காசநோய் உயிரைக் காவு வாங்கக் கூடிய அளவுக்குக் கொடிய நோயாக இல்லை.

நோய் வந்தால் சில நாட்களுக்கு முழுமையாக மருந்து, எடுத்துக் கொண்டால் போதும். நோயை குணமாக்கி விடலாம். இன்றைய கொரோனா போன்று சுவாசத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது காசநோய்.

இருமல், தும்மல், எச்சில் ஆகியவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது காசநோய். எனவேதான், அந்தக் காலத்தில் இந்நோய் பெரும் அச்சத்தை உண்டாக்கியது.இன்றைக்கும் அதே வழிமுறைகள் காரணமாகவே பெருமளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தொடக்கத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளாகும். காச நோய் உள்ளவர்கள்,தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகிலேயே காச நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த நோய் மிகச் சுலபமாக பரவக் கூடிய ஒரு நோய். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமினாலோ, சளி மற்றும் எச்சில் துப்பினாலோ அதிலிருந்து வெளிவரும் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களுக்கு நோய் உண்டாக்கி விடும்.

பொது இடங்களில் எச்சில், சளி துப்புவது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இருமும் போது வாயையும், மூக்கையும் மூடிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவாகவும் அலட்சியம் அதிகம் உள்ளவர்களும் நம்மிடையே அதிகம்.

கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருக்கும் போதும் பொது இடத்துக்குச் சென்றாலும் முகக்கவசத்தை அணிவது நல்லது. இதேபோல பேருந்து, ரயில் பயணங்களின் போதும் இதைக் கடைப்பிடிப்பது சிறந்தது.

காச நோய்க்கு இன்று மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும் கூட, இன்றும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம்உலக நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்க்கு 17 இலட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு.

பொதுவாக மூச்சுத் தொகுதியில், நுரையீரலைத் தாக்கி நோயை உண்டாக்கக் கூடியவை காச நோய்க் கிருமிகள். இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை, -குடல் தொகுதி, எலும்பு மூட்டுகள், இரத்த சுழற்சிப் பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்

இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகே காச நோயின் தன்மை குறித்து மருத்துவ உலகம் அறிய முடிந்தது. மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும், அதன் பின்னர் தீவிரமடைந்தது.இன்று இந்நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை முறைகள் இருப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்புதான் முன்னோடி. இந்தக் கண்டுபிடிப்புகாக 1905ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ​ரொபர்ட் காஹுக்குக் கிடைத்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி