நுகேகொட விஜயராம மஹா வித்தியாலயத்திற்குச் சொந்தமான 4 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி சம்பந்தமாக வர்த்த நோக்கத்தில் செயற்படத் தயாராவது தொடர்பில் ‘சிரச’ சிங்கள சேவையின் ‘விமர்ஷன’ நிகழ்சியின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அரை நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள இந்த பாடசாலை நகர்புறச் சூழலில் அமைந்துள்ளது. பாடசாலையின் காணி அதிக மதிப்பு வாய்ந்தது என்பதை அறிந்த திலித் ஜயவீர மற்றும் தம்மிக பெரேரா ஆகியோர் சிறி ஜயவர்தனபுர கோட்டே நகர சபை உறுப்பினரொருவருடன் சேர்ந்து பாடசாலை கேட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்த பலவந்தமான, அனுமதியற்ற செயல் சம்பந்தமாக பாடசாலை அதிபர் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் ‘சிரச’ தொலைக்காட்சி கூறுகிறது.

முன்னால் கல்வி அமைச்சர்களில் ஒருவரும் தற்போதைய அரசாங்கத்தின் மறுசீரமைப்பு அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவும் இப்பாடசாலை கல்வி பயின்றுள்ளதுடன், அவரது வீடும் பாடசாலைக்கு மிகச் சமீபமாக அமைந்துள்ளது.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்குச் சொந்தமான காணிகளை வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பு தெரிய வருகிறது. விசேடமாக கொழும்பு பல்கலைக் கழகம் மற்றும் நகர்ப்புற பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகளை இவ்வாறு பயன்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பது தெரிகிறது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி