“நீர் இன்றி அமையாது உலகம்” என்பது திருவள்ளுவரின் கூற்று. உலக நீர் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ம் தேதி, நீர் வளத்தின்; முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.

இயற்கை சமநிலையற்று சீர்குலைந்த சுற்றுச்சூழல் மனிதனுக்கு கிடைக்கின்ற நீரின் அளவையும் தரத்தையும் பாதிக்கிறது. இன்று உலகில் 21 பில்லியன் மக்கள் வீட்டில் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் வாழ்கின்றனர்; அவர்களின் உடல்நலம், கல்வி மற்றும் வாழ்வாதாரங்களும் பாதிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் 21 ஆம் தினத்தில் முறையாக முன்மொழியப்பட்டது.

அதே மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 1992 மார்ச் மாதம் சர்வதேச உலக நீர் தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வருடமும் பல்வேறு சிக்கல்களில் கவனம் செலுத்தி வருகிறது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் கல்வித் திட்டங்களின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கிறது, நமது பாரம்பரிய சொத்தான நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாத்து நிர்வகிக்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்புதான். 70 சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலகமக்கள் விவசாயத்திற்கும் தங்களுடைய தேவைக்கும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது.

இந்நாளின் முக்கியத்துவம் என்னவென்றால், நீர்வளத்தின் ஒட்டு மொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி, நீர்வளப்பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் கடுமையாகி வரும் நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதும் .மேலும் நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவதைக் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் ஆகும். மேலும் இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த பஞ்சபூதங்களையும் மாசு படுத்துகின்றனர்.

வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றனர். 2008ல் 'சுகாதாரத்திற்கான ஆண்டாகவும்', 2009ல் தண்ணீர் மற்றும் வாய்ப்புக்கள் பகிர்ந்துகொள்ளும் ஆண்டாகவும், 2010ல் 'தரமான நீர்' என்ற கருப்பொருளை கொண்ட ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது. அதன்பின், 2011ல் நகரங்களுக்கு 'தண்ணீர் - நகர்ப்புறமாற்றங்களுக்கு பதிலளித்தல்', 2012ல் 'தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு', 2013ல் 'நீர்நிறுவனம்', 2014ல் 'நீரும் ஆற்றலும்', 2015ல் 'நீரும் நிலையான மேம்பாடும்', 2016ல் 'சிறந்த நீர் சிறந்த தொழில்கள்'. 2017ல் 'ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?' என்ற கருப்பொருள் கொண்டு மாநாடுகள் நடத்தப்பட்டது.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்விக் குறிதான். உலகில் கிடைக்கக் கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது.

ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. தண்ணீர்த்  தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம்.

2016ம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றியுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 2015ம் ஆண்டில் பெய்தமழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் வர்ணித்தனர். ஆனால் பெய்த மழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்கவில்லை என்பதே உண்மை.  அன்று தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சரிபாதி நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்டது என்பதை அந்த மழை உணர்த்தியது.  

இன்று நகரமயமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சத்திற்கு காரணம். முன்பெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்திலோ அல்லது பானையிலோ தண்ணீர் வைக்கப்படும்.

அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் பானையில் உள்ள நீரை அருந்தி தனது தாகத்தைத் தணித்துக்கொள்வர். இன்றைய நிலையில் அதுபோன்ற காட்சிகளை எங்கும் காணமுடிகிறதில்லை. 

இந்த 'உலக தண்ணீர் தினம்' என்பது கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 'தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்' என்பதை ஒவ்வொரு குடிமகனும், அந்நாட்டு அரசும் புரிந்துகொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது. 

“நமது உடல் நலம் பாதிக்கப்படுமாயின், நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற கூற்றினை நாம் அனைவரும் அறிவோம்”. ஆனால் வளமான சுற்றுச்சூழலை நாம் இழக்க நோரிடுமாயின் நமது அடிப்படையான வாழ்வே இழக்கப்பட்டுவிடும் என்ற உண்மையினை நாம் இன்னமும் அறிய வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது மாறிவரும் சுற்றுச்சூழலை உணரும் நெருக்கடியான காலம் வந்துவிட்டது. மக்கட்தொகை பெருக்கம், மிதமிஞ்சிய நகரயமயமாகுதல், பயிரிடும் நிலங்கள் குறைந்துவருதல், சாலையில் ஓடும் வாகனப்பெருக்கம், உலகளாவிய வெப்பநிலை, காடுகள் அழிதல், தொழிற்சாலை மயமாகுதல், மக்களிடையே மாறிவரும் நுகர்வுத் தன்மை, மனிதர்களின் செயல்களால் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயற்கைவளங்கள் போன்றவைகள் அனைத்தும் நாம் பூமியில் வாழும் அடிப்படை    வாழ்க்கையையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.

நமது சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துவருவதை இத்தகைய தருணத்திலாவது நாம் உணா்ந்து எச்சரிக்கையுடன் இருக்காவிடில் அனைத்து வளங்களையும் நாம் இழக்க நேரிடும். உலகின் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் குறிப்பாக கீழ்காணும பத்து காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

1. மிகப்பெரிய அளவில் பனிமலைகள் உருகும்.

2. கடல் மட்டம் உயரும் அல்லது கடல் உள்வாங்கும். இதனால் மிகப்பெரிய நிலப்பரப்புகள் நீருக்குள் மூழ்கடித்து கோடிக்கணக்கான மக்கள் இறக்கவும் நேரிடும்.

3. மழை பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் உலக தானிய மற்றும் உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்து விடும்.

4. வறட்சி அதிகரிக்கும். இதனால் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகரிக்கும்.

5. புயல்களும் சூறாவளிக்காற்றுகளும் அதிகரித்து எண்ணிலடங்கா நாசமோசங்களை ஏற்படுத்தும்.

6. நீர்வள பாதிப்புகள் அதிக அளவில் நிகழும்.

7. உயிர்ச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பல உயிரினங்கள் மறைந்து விடும்.

8. வேளாண் உற்பத்தி குறையும். இதனால் மக்கள் இயற்கை உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும்.

9. நோய்கள் அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காமல் போகும்.

10. 205-ஆம் ஆண்டுடன் பூமியின் தண்ணீரின் அளவு மூன்றில் ஒரு பகுதியாக குறையும்.

பொன்மொழிகள்

“மரங்களை நாசம் பண்ணு, அப்போது மண்வளம் அழியும்,
மண்ணை நாசம் பண்ணு, நீர்வளம் அழியும்,
நீரை நாசம் பண்ணு, அப்போது தேசம் அழியும். அப்போது நீ பாலைவனத்தை உடைமையாக்கி கொள்வாய்”. ஆகையால் ஒரு தேசத்தின் பலம் அதன் மண்ணை சார்ந்திருக்கிறது என்ற உண்மையை அறிந்து செயல்படுவோம்.

உறுதிமொழிகள்

நான் இயற்கைக்கும் அதன் வளத்திற்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காமல் பாதுகாப்பேன் என்றும் என்னையோ அல்லது மற்றவர்களையோ சூழலுக்கு எதிரான யாதொரு செயல்களிலும் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் மாசுபடல், இயற்கைவளம் குன்றல், உயிரின் பன்மய இழப்பு, அடிப்படை வசதிகள் போன்ற சூழ்நிலை பிரச்சினைகளை இயற்கையோடு சேர்ந்து தீர்வு காண்பேன் என்றும் நாட்டின் வளம் குன்றாத வளா்ச்சிக்கு என்னுடனிருப்பவர்கள் இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலைப் பற்றி அறியும்படி செய்வேன் என்றும் நான் இதன் மூலம் உளமார உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு துளி நீரையும் காப்போம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவேன்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி