சம்மாந்துறை டிப்போ விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ள விடயங்களை ஆட்சேபித்து, சம்மாந்துறை டிப்போவை கல்முனையுடன் இணைக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி,

இன்றும் போக்குவரத்து அமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் சந்தித்து பேசினார்.

இதன்போது சம்மாந்துறை டிப்போவானது அதிக இலாபம் ஈட்டும் ஒரு நிலையம் என்பதையும் அந்த பிரதேசத்தில் ஏன் இந்த டிப்போ தேவை அதன் அவசியங்கள் குறித்தும் விளக்கியதுடன் இது தொடர்பில் உடனடியாக சிறந்த தீர்வை பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அமைச்சரை கேட்டுக்கொண்டார். இதன்போது பதிலளித்த போக்குவரத்து அமைச்சர்,  இது தொடர்பில் தான் எதுவும் அறிந்திருக்க வில்லை என்றும் இராஜாங்க  அமைச்சர் எடுத்த முடிவே இது என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் உரியவர்களிடம் தீர ஆலோசித்து நல்ல முடிவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தருவதாகவும் அதுவரை அவகாசம் தேவை என்பதை பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி