தமிழக அரசியல் கட்சி ஈழம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்துக்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாதென தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தென்னிந்தியாவின் தேர்தல் களத்தில் இலங்கை தமிழர்களின் விவகாரம் பிரதான தேர்தல் பிரசாரமாக காணப்படுகிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் மறக்கப்பட்டு விடும். கால காலமாக இவ்வாறான தன்மையே காணப்படுகிறது.  

பாரிய போராட்டத்திற்கு மத்தியில் 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாட்டில் இனியொருபோதும் பிரிவினைவாத செயற்பாடுகள் எவ்வழிகளினாலும் தோற்றம் பெறாது என்றார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி