மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், ராணி பிரிவில் 20 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதியில் இன்று (17) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

தீ விபத்தினால் 20 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள், தோட்டத்திலுள்ள குயின்ஸ்லன் தமிழ் வித்தியாலத்தில் தற்காலிகமாக  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்கள், தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.  

மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி கோவிந்தன் ஸ்தலத்துக்கு விரைந்து சேத விவரங்களைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலருணவுப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி