பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில், மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதவான் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், பிரதிவாதிகளுக்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில், இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 9 ஆம் திகதி ஆற்றிய உரையின் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவ்வாறான பொய்யான கருத்துக்களை வௌியிட்டமை மற்றும் தமது பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் 10 கோடி ரூபா நட்டஈட்டை பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத்தருமாறும் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி