வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் தொடர்ந்து 8ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்றையதினம் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் போக்குவரத்து சில மணிநேரம்  தடைப்பட்டிந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த யாழ்ப்பாண காவல்துறையினர் மாற்று வீதியால் பயணத்தை மேற்கொள்ளுமாறு, பொதுமக்கள் மற்றும்  சாரதிகளிடம் தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உடனடியாக 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அத்தோடு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி