சம்மாந்துறை தனியார்வங்கி( HNB)கிளையின் உதவிமுகாமையாளருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து கிளை நேற்று(12) வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சம்மாந்துறையைச்சேர்ந்த குறித்த உதவி முகாமையாளரின் தந்தையாருக்கு தொற்று ஏற்பட்டதாகக்கூறி கடந்த வெள்ளி முதல் (5) அவர் கிளைக்கு வரவில்லை.

கடந்த திங்கள் செவ்வாய் புதன் ஆகிய தினங்களில் அவர் கிளைக்கு வரவில்லை.எனினும் பிசிஆர் சோதனை செய்து பார்த்தபோது 10ஆம் திகதி புதனிரவு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மறுநாள் வியாழன் விடுமுறை.ஆதலால் நேற்று(12) வெள்ளியன்று கிளை மூடப்பட்டது.

அதேவேளை கிளையிலுள்ள முகாமையாளர் ஊழியர்கள் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட 11பேரும் அவரவர் வீடுகளில் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் காரைதீவைச்சேர்ந்த நால்வர் மட்டுநகரைச் சேர்ந்த மூவர் கல்முனை மற்றும் கல்லாற்றைச்சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி