இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 10வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 03ம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று 10வது நாளாகவும் தொடர்கிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த போராட்டத்தில்
இன்றைய போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதகுருமார், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வவர் ஆலயத்தின் முன் இருந்த உண்ணாவிரதப் போராட்ட கொட்டகை மற்றும் பதாதைகள் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதே வேளை போராட்டக்காரர்களின் கொட்டகை மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டதையடுத்து இன்று காலை முதல் சுடும் வெயிலிலும் தமது உணவுதவிர்ப்பு சுழற்சி முறையிலான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.சிவயோகநாதன் மற்றும் வண.பிதா.கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்

