உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன்படி ‘பொதுபலசேனா’ அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 8 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் சிலர் குறை கூறுகின்றனர். ஆ​ணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம்.

அதில் ஒன்றை குறிப்பிட்டுக் கூறுவதென்றால், பெளத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பை தடை செய்யக்கோரி ஜனாதிபதி ஆ​ணைக்குழுவினால் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவ்வாறு கூறப்பட்டிருப்பினும் பொதுபலசேனா அமைப்பை நாம் தடை செய்​யமாட்டோம். 

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாம் போதனைகளை நடத்தும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்” என்றார்.

மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“மத்ரசா பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள், பாட விதானங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுப்போம்.

மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு.

பாதுகாப்பு செலாளராக கோத்தாபய ராஜபக்ஷ செயற்பட்ட காலத்தில் வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு வீசா வழங்கும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டது.

புலனாய்வுத்துறையினரின் ஆலோசனைகள் பெற்றதன் பின்னரே வெளிநாட்டு பயணி ஒருவருக்கு இலங்கை வருவதற்கான வீசா வழங்கப்பட்டு வந்தது.

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அவ்வாறான நடைமுறை ஏதும் பின்பற்றப்படவில்லை. வெளிநாட்டு பயணிகளுக்கு ‘ஒன் எரய்வல் வீசா’ வழங்கப்பட்டது. இவையும் நாட்டின் பாதுகாப்புக்கு ஓர் பாதிப்பாகும். என்றார்.

நாம் சிலரை பாதுகாப்பதாக கூறுகின்றனர். நாம் யாரையும் பாதுகாக்கவும் இல்லை. யாரையும் கஷ்டத்துக்குள்ளாக்கவும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு நாம் பொறுபேற்க முடியாது.

இந்த அறிக்கை தொடர்பில் 3 நாட்கள் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படும். எதிர்வரும் 10 ஆம் திகதியன்று விவாதம் ஆரம்பமாகும் என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி