கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று சனிக்கிழமை இரண்டாவது நாள் இரவு ஏழுமணிவரை எட்டு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் பதினேழு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த நான்கு பேர் திகாரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் கொழும்பைச் சேர்ந்த ஒருவருமாக எட்டு ஜனாசாக்கள் இன்று இரவு ஏழு மணிவரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி மஜ்மாநகர் பகுதியில் நேற்றைய தினம் 09 ஜனாசாக்களும் இன்றைய தினத்தில் இரவு ஏழுமணிவரை அடக்கப்பட்ட 08 ஜனாசாக்களையும் சேர்த்து 17 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அடக்கம் செய்யும் பணி இன்று இரவு 11மணிவரை தொடரவுள்ளதாகவும் களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரில் பாதுகாப்பில் உள்ளதுடன் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி