கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் இணங்காணப்பட்ட இடமொன்றில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, இந்த இடத்தை அடையாளம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் அடக்கம் செய்வதை ஏற்க முடியாது அது இன பாகுபாட்டை ஏற்படுத்தும் என சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி