தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஷாலினி அஜித்குமார். அதேபோல், ஷாலினி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ‘காதலுக்கு மரியாதை’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஷாலினி, தல அஜித்துடன் இணைந்து ‘அமர்க்களம்’ படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர். அதற்குப் பிறகும் கண்ணுக்குள்-நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற சில படங்களில் ஷாலினி நடித்துள்ளார். கல்யாணத்துக்கு பிறகு ஷாலினி எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாலினி தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில், வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காதலுக்கான புரட்சியை ஏற்படுத்திய படம் என்றால் அது ‘அலைபாயுதே’ தான்.

இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்க, ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீஸில் பெரும் சாதனை புரிந்தது.தற்போது ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.  இந்தத் தகவல் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவதோடு, ஷாலினியை வெள்ளித்திரைக்கு வரவேற்று கொண்டிருக்கிறாராம். மணிரத்தினம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளாராம். தல அஜித்துக்கு ஆஸ்தான இயக்குனர் மணிரத்தினம்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி