உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கட்டாய தகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி முஸ்லிம் இடது முன்னணி இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு மஹஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட பிரதிநிதியான ஹன்னா சிங்கருக்கு 26 ஆம் திகதி மஹஜரை வழங்கிய முஸ்லிம் இடது முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல், கருத்து தெரிவிக்கையில் மரணித்த முஸ்லிம்களின் உடலை அனைத்து அரசாங்க சுகாதார பரிந்துரைகளுக்கும் உட்பட்டு குளிப்பாட்டி, கபன்செய்து ஜனாசா தொழுகை நடாத்தி பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய உலக சுகாதார தாபனம் விதித்த நிபந்தனைகளுக்கு ஏற்ப உடலை அடக்கம் செய்யும் அனுமதி மட்டுமே அவர்கள் அரசாங்கத்திடம் கேட்கிறார்கள் என்று தெரிவித்தார்.

சிறுபான்மையினரை குறிவைத்து மனித உரிமை மீறல் என கொவிட் தொற்றுநோயால் இறக்கும் மக்களை தகனம் செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் கட்டாய தகனக் கொள்கையை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல் என்றும், தற்போதுள்ள தப்பெண்ணங்கள், ஆத்திரங்கள் மற்றும் வன்முறைகளை மேலும் வளர்ச்சியடைய வழிவகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி