நாட்டில் தீவிரவாத, பயங்கரவாத சக்திகள் காணப்படுகின்ற வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

யங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு இணங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் தடுப்பில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அச்சுறுத்தல்கள் காணப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் கைதுகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் தற்போதும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் காணப்படுகின்றதால் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை விசாரணை செய்வதற்கு இவ்வாறான சட்டங்கள் அவசியம். இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உகந்த விடயம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுமாறு தெரிவிக்கின்றது. ஆனால் அவர்கள் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக இங்கு வரப்போவதில்லை.

அவர்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக என்ன உதவியை வழங்குகின்றனர். பயங்கரவாதம் தீவிரவாதத்தினால் நெருக்கடிகனை அனுபவிக்கின்றவர்கள் நாங்கள் என்பதால் நாங்களே இதனை தீர்மானிக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்லை என தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி