விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி முதல் ரன்னர்அப்பாகவும், ரியோ, ரம்யா, சோம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளனர். இந்த ஐவரில் சோம் சற்று நேரத்துக்கு முன்னர் எவிக்ட்டாகி வெளியே வந்துள்ளார்.

ஃபைனல் ரவுண்டுக்கு வந்த இந்த ஐந்து பேர் இன்றைய நாளையும் சேர்த்து 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருக்கிறார்கள். மிகவும் குறைந்த நாள் அந்த வீட்டுக்குள் இருந்தவரென்றால் நடிகை ரேகாதான். முதல் எவிக்‌ஷனிலேயே இவர் வெளியேறி விட்டார்.
சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்ன?முதலில் பெண் போட்டியாளர்களின் சம்பளம் பார்க்கலாம்

பெண் போட்டியாளர்களில் ரேகா, சனம் ஷெட்டி இருவருக்கும் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் சம்பளம். இவர்கள் இருந்த நாட்களைக் கணக்கிட்டு அதில் வரி பிடித்தம் போக மீதியைப் பெற்றுக்கொண்டார்கள்.

அடுத்து சுசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 80,000 ரூபாய். அர்ச்சனா, ரம்யா பாண்டியன் இருவருக்கும் ரூ. 75,000.

ஆரிதான் பிக்பாஸ் வின்னர்... ஆனால், அடுத்தடுத்த இடங்கள் யாருக்குத் தெரியுமா?! #BiggBossCompletelistAlso Readஆரிதான் பிக்பாஸ் வின்னர்... ஆனால், அடுத்தடுத்த இடங்கள் யாருக்குத் தெரியுமா?! #BiggBossCompletelistகேப்ரியல்லாவின் ஒருநாள் சம்பளம் ரூ. 70,000. அவர் ஃபைனலில் இருந்து வெளியேற விரும்பிப் பெற்றுக் கொண்ட ஐந்து லட்சம் இதில் எக்ஸ்ட்ரா.

ஷிவானிக்கு ரூ.60,000. நிஷா, சம்யுக்தா, அனிதா சம்பத் மூவருக்கும் ரூ.40,000.

அடுத்ததாக ஆண் போட்டியாளர்களின் சம்பள விபரம்:ஆண் போட்டியாளர்களில் ஆரிக்குத்தான் அதிக சம்பளம். இவரது ஒருநாள் சம்பளம் ரூ. 85,000. 105 நாட்களுக்குக் கணக்கிட்டு அந்தத் தொகையுடன் டைட்டில் வென்றதற்காக வழங்கப்படும் ஐம்பது லட்சமும் சேர்த்து வழங்கப்படும். மொத்தம் சேரும் தொகையில் வரி பிடித்தம் போக மீதி கையில் கிடைக்கும்.

ஆரிக்கு அடுத்தபடியாக ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை தவிர்த்து நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் சில போட்டியாளர்களுக்குக் கிடைக்கலாம். அது அந்தச் சூழலைப் பொறுத்தது என்கிறார்கள்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி