ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ 'FAIL' தான் என்று மெடில்லே தேரர் கூறுகிறார்.அமெரிக்க எம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை முகவரான பசில் ராஜபக்ஷ ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளார், விரைவில் ஜனாதிபதியை அவர் வீட்டிற்கு அனுப்புவார் என்று சிங்கலே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பன்னாலோக​ தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ இப்போது ஒர் ‘போர்ன் எகெய்ன்' கும்பல் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவால் சூழப்பப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி முடிவுகளை எடுக்கிறார் என்றும் அவர் கூறுகிறார்.

ஜனாதிபதி ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடும் சங்க ஆலோசனைக் குழுக்கூட்டத்திற்கு எங்களை அழைக்கமாட்டார் வஞ்சகம், துரோகம் செய்யும் தேரர்களையே அழைப்பார். நாங்கள் உண்மையைச் சொல்லி விடுவோம் என பயப்படுகிறார்.

ஊடகவியலாளர் சமுதிக சமரவிக்ரமவுடன் இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஞானசர தேரர் பணத்திற்கு விலை போய்விட்டார்!

ஞானசர தேரரின் தற்போதைய பாத்திரத்தை கடுமையாக விமர்சித்த மடில்லே தேரர் பொது பலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசர தேரர் முஸ்லிம்களின் பணத்திற்கு விலை போய்விட்டதாகவும் தேசிய வேலைத்திட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலி சப்ரியின் சகோதரர் மாகல்கந்தே விகாரைக்கு​ ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள சென்றதாகவும் அச்சந்தர்ப்பத்தில் சமகி ஜன பலவேகயவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் அவருடன் இணைந்து சென்றதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

அவர்கள் இப்போது எங்களுக்கும் பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.

பிடிதுவே சிறிதம்ம தே​ரரே தனது பிறந்த நாளில் கேக் வெட்டி சாப்பிட்டு சங்க ஒழுக்கத்தை சீரழித்தார்.

mnm

கேக் வெட்டி முகம் முழுக்க பூசிக் கொண்ட சிறிதம்ம தே​ரரே சாசனவின் வீழ்ச்சிக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறினார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி