இன்று (03) காலை பொத்துவில் பொதுச்சந்தையில் தவிசாளரே எங்களது கடைகளை எங்களுக்குத்தா என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் பொத்துவில் பொதுச்சந்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

01.01.2021 அன்று பொத்துவில் பொதுச்சந்தையில் முன்பு அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதி மீள் புணர் நிர்மாணம்செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

குறிப்பிட்ட கடைத்தொகுதியை நிர்மாணிப்பதில் பாரிய ஊழல் நடந்துள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்

இப்போது இந்த கடைகளை வழங்கி வைப்பதிலும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்  எம்.எஸ்.எம். வாசித் அவருக்கு நெருங்கியவர்களுக்கு மட்டும் வழங்கியதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கடைகளை வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்திருந்த நிலையில் பொலிசார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் தலையீட்டினால் அவர்களது நடவடிக்கை கைவிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

pppppb.jpg

pa.jpg

pvf.jpg

 

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி