அண்மையில் உக்ரேனிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மூன்று சுற்றுலாப் பயணிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரேனிலிருந்து மூன்று சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட மூன்று சுற்றுலாப் பயணிகள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் நோக்கத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட முறையின் கீழ் வெளிநாட்டினரை அழைத்து வருவது சமீபத்தில் தொடங்கப்பட்டது.

180 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை கொண்ட முதல் குழுவினர் 28 ஆம் திகதி மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கைக்கு வந்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கும் பின்னர் ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

பி.சி.ஆர் சோதனைகளில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

204 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் இரண்டாவது தொகுதி நேற்று (29) இலங்கைக்கு வந்து சேர்ந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி