விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம். அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம் என்று கூறியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.இந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், பாஜக இந்த சட்டங்களுக்கு ஆதரவாக பல விதங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் இந்த ஓராண்டுக்கு செயற்படுத்திப் பார்க்கும் யோசனையை முன்வைத்தார்.

எல்லாப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உண்டு என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோதி விவசாயிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடர விரும்புகிறார். எனவே, போராடும் விவசாயிகள், பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ராஜ்நாத் சிங். இது போன்ற ஒரு வேண்டுகோளை கடந்த இரண்டு நாள்களில் இரண்டாவது முறையாக விடுத்துள்ளார்.

किसान आंदोलन

குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்பது ஒரு பொய்யான நம்பிக்கை என்று கூறிய ராஜ்நாத், பிரதமர் சொல்லியிருக்கிறார். நானும் எனது உத்தரவாதத்தை தருகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலை தருவது நிறுத்தப்படாது என்றார் ராஜ்நாத் சிங்.

விவசாயிகளுக்கு 18,000 கோடி நிதி ஒதுக்கிய மோதி

இதனிடையே , 'பிரதான் மந்த்ரி கிசான் சம்மான் நிதி' என்று வடமொழியில் பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் குடும்பங்களுக்கு 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டால், விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படும் என்று சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் அந்த நிகழ்வில் குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோதி.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி