சபாநாயகர் மீது மோசடி குற்றச்சாட்டு ; உயரிடத்திற்கு சென்ற முறைப்பாடு


வாகன பயன்பாடு, இரண்டு வீடுகள் பயன்பாடு தொடர்பில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டார நேற்று சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி வருமாறு குறிப்பிட்டார்.

மோசடி குற்றச்சாட்டு
அரச செலவினங்களை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது முறையற்ற வகையில் செயற்படுகிறது.

மக்களுக்கு ஒன்றை குறிப்பிட்டு விட்டு,பிறிதொன்றையே அரசாங்கம் செயற்படுத்துகிறது. சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வமான வாசஸ்தலமான மும்தாஜ் மஹாலை பயன்படுத்தாமல் லொரிஸ் தொடர்பாடி குடியிருப்பில் வசிக்கிறார்.இந்த தொடர்மாடி குடியிறுப்பில் தற்போது அவரது தனிப்பட்ட செயலாளர் வசிக்கிறார்.

சபாநாயகருக்கு எவ்வாறு அரச செலவில் இரண்டு வசிப்பிடங்களை வழங்க முடியும். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அனுமதியுடன் சபாநாயகருக்கு இரண்டு வாகனங்களும்,900 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சபாநாயகர் 3 வாகனங்களை பயன்படுத்துகிறார். சபாநாயகருக்கு எவ்வாறு இரண்டு இல்லங்களையும், அனுமதியற்ற வகையில் வாகனத்தையும் வழங்க முடியும். இதனூடாக மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்படுகிறது.

ஆகவே இதற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம் என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி