செம்மனி புதைகுழி விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. இன அழிப்புக்கான சா்வதேச நீதி விசாரணைக்கு

என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். சமூகவலைத்தளத்தில் பல பதிவுகளை இட்டிருக்கிறேன்.

ஆனால் எமது தமிழ்ச் சட்டத்தரணிகளில் சிலர் குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடும் சட்டத்தரணிகள் அதற்குச் சொல்லும் காரண - காரியங்கள் ஏற்புடையதல்ல.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நீதிமன்றத்திற்குள் நியாயங்களைத் தேட முடியாது. இலங்கை நாடாளுமன்றத்தில் எதனை பேசினாலும். அது தமிழ் ஊடகங்களுக்கான செய்தியாக மாத்திரமே அமையும். வேண்டுமானல், அடுத்த தேர்தலில் வாக்கு வங்கியை அதிகரிக்க அந்தப் பேச்சு உதவும்.

ஆகவே இது பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. (கூர்மை ஆய்வு இணையத்தில் பல தகவல்கள் உண்டு)

ஆகவே தேர்தல் அரசியலை கடந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். போரில் பங்கெடுத்த இளைர்கள் - போரில் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.

தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அல்லாத சில தமிழ் பிரமுகர்கள் - பத்திரிகைப் பிரமுகர்கள், சிங்கள அரசியல் தலைவர்கள் சிலரைக் காப்பற்றும் நோக்கில் வெளியிடும் கற்பனைத் தகவல்கள் தமிழ் மக்களை அவமானப்படுத்துகின்றன.

”இலங்கை அரசு” என்ற கட்டமைப்புத்தான் பொறுப்புச் சொல்ல வேண்டுமே தவிர. சிங்கள அரசியல் தலைவர்கள் அல்ல. ஏனெனில் சிங்கள அரசியல் தலைவர்கள் வெறும் கருவி மாத்திரமே.

பௌத்த தேசியவாதத்தைக் கடந்து எந்தவொரு சிங்கள தலைவர்களும் செயற்பட முடியாது. அப்படிச் செயற்பட்டால், அவர்களால் ஆட்சி நடத்த இயலாது.

ஆகவே சிங்கள - தமிழ் முரண்பாடு எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை புரிந்து கொண்டு ஒருமித்த குரலில் செயற்பட வேண்டும்.

இன அழிப்பு 1956/58 களில் ஆரம்பித்து.

இன அழிப்பு என்பது கொலைகள் மாத்திரமல்ல --

ஒரு இனத்தின் கலை, பண்பாடு, மரபுரிமை, வரலாற்றுகள் ஆகியவற்றைத் திட்டமிட்டு அழித்தால் அல்லது மாற்றியமைத்தால், அது இன அழிப்புத்தான்.

2016 ஆம் ஆண்டில் இருந்து பாடநூல்களில் தமிழ் இன வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிங்களச் சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன. இவை பற்றி எல்லாம் விரிவாக எழுதியுள்ளேன்.

குறிப்பு--

சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ.க்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு. இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி