இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில், பொதுமக்கள் வழிபாடு
செய்ய இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட முடியுமென, இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், அனுமதிக்கப்பட்ட இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கோயிலுக்குச் சென்று, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.