தற்போது நாட்டின் பல பகுதிகளில், சிக்குன்குன்யா தொற்றுப் பரவல் தீவிரமாகியுள்ளதென்று, தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.
கொழும்பு மாவட்டத்தின் கடுவெல, கொத்தட்டுவ மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளிலும் இந்த நோய் அதிகளவில் பரவி வருவதாக தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சிந்தன பெரேரா கூறுகிறார்.