நாட்டில் 900,000 குடும்பங்கள் வீட்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின்
முன்னாள் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்களின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
900,000 வீட்டுத் தேவையாளர்களின் நெருக்கடி குறித்து அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கத்திடம் தனிப்பட்ட ரீதியில் முன்மொழிவை சமர்ப்பித்ததாகவும் அரசாங்கத்திடமிருந்து திருப்திகரமான பதிலைப் பெற்றதாகவும், இது பேச்சளவில் மட்டும் நின்றுவிடாமல், நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.