எலோன் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம், இன்று மாலை திடீரென முடங்கியது.
இலங்கை நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயல்பட முடியவில்லை.
சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை முடக்கத்தை சந்தித்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் மீண்டும் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய தகவல்களைப் பதிவேற்ற முயற்சி செய்யும்போது, "ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கவும்" என்ற நிலைத்தகவலையே காட்டியது.
முன்னதாக நேற்றும் சர்வதேச அளவில் எக்ஸ் தளம் பெரும் செயலிழப்பைச் சந்தித்தது. இலங்கை நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டது.
பின்பு சிறிது நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் எக்ஸ் தளம் முடங்குவது இது இரண்டாவது முறை.