நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில், நேற்று (22) ஒரு கிலோகிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாயாகக் காணப்பட்டுள்ளது.
அந்த மையத்தில், ஒரு கிலோகிராம் முருங்கையின் மொத்த விலையும், 20 ரூபாய் குறைவாக 1,980 ரூபாயாகக் காணப்பட்டது.
அதே பொருளாதார மையத்தில் ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 1,000 ரூபாயாகக் காணப்பட்டது.
அத்துடன், ஒரு கிலோ கெரட்டின் சில்லறை விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோ பீட்ரூட்டின் விலை 700 ரூபாயாகவும், ஒரு கிலோ கோவாவின் விலை 500 ரூபாயாகவும், ஒரு கிலோ தக்காளியின் விலை 700 ரூபாயாகவும் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, கெப்பட்டிபொல பொருளாதார மையத்தில் ஒரு கிலோ முருங்கையின் மொத்த விலை ரூ. 650ஆகக் காணப்பட்ட அதேவேளை, அந்த மையத்தில் ஒரு கிலோ கறிமிளகாய் 700 முதல் 750 ரூபாய் வரையும், ஒரு கிலோ கெரட் 500 முதல் 600 ரூபாய் என்ற அடிப்படையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.