இலங்கையின் 52ஆவது குடியரசு தினம் மே 22ஆம் திகதியான இன்றைய தினம் கொண்டாப்படுகிறது.
1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும், அது முழு சுதந்திரமாக இருக்கவில்லை.
1972ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி, சுதந்திர குடியரசாக மே மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து முற்றாக விடுதலை பெற்று, 'சிலோன்' என்ற பெயர் நீக்கப்பட்டு, 'ஸ்ரீலங்கா' என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டு, இந்நாடு ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசானது 1972 மே 22ஆம் திகதியாகும். அன்றைய தினம் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, பாற்சோறு பொங்கி பொதுமக்கள் கோலாகலமான கொண்டாடினர்.
அதற்கடுத்து, இலங்கை குடியரசாகி ஓராண்டு நிறைவை முன்னிட்டு 1973ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி முதலாவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில், இலங்கையின் முதலாவது குடியரசு தினம் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று, அப்போதைய வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கு காணலாம்.