மத்திய மலைநாட்டில் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளின் வீதிகளில் இருபுறமும், கெல்வனைஸினாலான

பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கிலோமீற்றர் சுற்றளவில் இதுபோன்ற இடங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 15 கிலோமீற்றர் பிரதேசத்துக்கான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அச்சபை கூறியுள்ளது.

கடந்த காலங்களில் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்பட்ட பகுதிகள் தொடர்பில் குறிப்பாக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ள சபை, இதன் கீழ், கண்டி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள வீதிகளின் ஆபத்தான இடங்களுக்கு கெல்வனைஸினாலான பாதுகாப்பு வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி