அமெரிக்கத் தூதரக அதிகாரிகளது கணக்குகள் போன்று தோற்றமளிக்கும் போலியான சமூக ஊடகக் கணக்குகள்
தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கிறது.
கொழும்பு, இலங்கை : மே 20, 2025 – அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்பவர்களின் சமூக ஊடகக் கணக்குகளுடன் தொடர்பாடல்களை/ ஊடாட்டங்களை மேற்கொள்வதை அல்லது அவற்றினூடாக வழங்கப்படும் தகவல்களை நம்புவதைத் தவிர்த்து, அமெரிக்கத் தூதரகத்தையோ அல்லது அதன் அதிகாரிகளையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எந்தவொரு கணக்கினதும் நம்பகத்தன்மையினை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
எமது தூதரகத்தின் மிகவும் துல்லியமான மற்றும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு, போலிகளைத் தவிர்த்து, நேரடியாக எமது மூலாதாரங்களை நாடவும். https://lk.usembassy.gov/ எனும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன், எமது தூதரகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை மாத்திரம் பின்தொடரவும்:
- தூதுவர் சங் அவர்களின் X தள கணக்கு: @USAmbSL
- இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் X தள கணக்கு: @USEmbSL
- இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இன்ஸ்டகிராம்: @USEmbSL
- இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முகநூல்: http://facebook.com/Colombo.USEmbassy
இலங்கையில் அமெரிக்காவின் பணிகள் பற்றிய துல்லியமான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு தூதுவர் ஜுலீ சங் அவர்களின் X தள கணக்கினைப் (@USAmbSL) பின்தொடருமாறு பொதுமக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அமெரிக்கத் தூதுவருக்கு முகநூல், இன்ஸ்டகிராம் அல்லது டெலிகிராமில் எவ்வித கணக்குகளும் இல்லையென்பதை கருத்திற்கொள்ளவும். இவ்வாறான தளங்களில் அவரது பெயரில் ஏதேனும் கணக்குளை நீங்கள் அவதானித்தால் அது அவரது உண்மையான கணக்கு இல்லையென்பதை அறிந்து கொள்ளவும்!
அமெரிக்க வீசா சேவைகள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தின் கொன்சியுலர் அதிகாரிகள் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகவோ அல்லது நேரடியான செய்திகள் மூலமாகவோ தனிநபர்களைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளவும்.