“போர் முடிவடைந்ததிலிருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்படவில்லை. போரில், நாம் முழுமையான
வெற்றியாளர்கள் அல்லர். இந்த நாட்டில் அமைதியை உருவாக்குவதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும்” என்று, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெறப்பட்ட யுத்த வெற்றியை நினைவுகூரும் தேசிய இராணுவ நினைவுதின நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், பத்தரமுல்ல இராணுவ நினைவுச்சின்னத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதில், யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த முப்படைத் தளபதிகளான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒஃப் தி எயார் ரொஷான் குணதிலக்க, கடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரும், இந்த நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில், நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ந்து கூறியதாவது,
“நாட்டில் முழுமையான வெற்றியாளர்கள் இல்லை என்றும், நாட்டில் சட்டம் ஒழுங்கை முழுமையாக நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே முழுமையான வெற்றியாளர்களை அடைய முடியும்.
“நாங்கள் போதுமான அளவு இரத்தம் சிந்தியுள்ளோம். பூமி நனையும் வரை இரத்தம் சிந்திய தேசம். ஆறுகள் இரத்தத்தால் ஓடும் வரை இரத்தம் சிந்திய தேசம் நாங்கள்.
“போரின் மிகக் கொடூரமான வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்த மக்கள் நாங்கள், அவை அனுபவங்களாக இருந்தால், அத்தகைய சூழ்நிலை மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்.
“நாம் முழுமையான வெற்றியாளர்கள் அல்ல. இந்த நாட்டில் அமைதியை உருவாக்குவதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும்.
எனவே, கோரனடுவாவுக்கு அஞ்சாமல் அமைதிக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
நாம் பொருளாதார இறையாண்மையை இழந்த ஒரு நாடாக இருக்கிறோம் என்பது உண்மைதான். நாம் நமது சொந்த பொருளாதார முடிவுகளை எடுக்கும் வலிமை இல்லாத ஒரு நாடு.
எனவே, இந்த தாய்நாட்டை உலகிற்கு முன்பாக பெருமைமிக்க நாடாக மாற்ற வேண்டுமென்றால், இந்தப் பொருளாதார மாற்றத்தை நாம் அடைய வேண்டும்.
மோதல் மற்றும் வெறுப்பு இல்லாத ஒரு அரசை நாம் உருவாக்க வேண்டும். அங்குதான் நமது தாயகத்தில் முழுமையான சுதந்திரமும் வலுவான இறையாண்மையும் இருக்கும்” என தெரிவித்தார்.
இதேவேளை, 16ஆவது தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வுடன் இணைந்து, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று (19) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
அதன்படி, இலங்கை கடற்படையில் 22 அதிகாரிகளுக்கும், 1,256 வீரர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
மேலும், இலங்கை விமானப்படையில் 9 அதிகாரிகளுக்கும், 868 வீரர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்தது.
16வது தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வுடன் இணைந்து, இலங்கை இராணுவத்தில் 186 அதிகாரிகளுக்கும், 10,093 சிவீரர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.