இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பான

பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்காக எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது” என்று, கனேடியப் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

WhatsApp_Image_2025-05-18_at_7.20.45_PM.jpeg

 

WhatsApp_Image_2025-05-18_at_7.20.44_PM.jpeg

இதேவேளை, கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு 16 வருடங்களாகியுள்ளதை குறிக்கும் விசேட நீண்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“எங்கள் தாய் நாடு பிரிவினைவாத பயங்கரவாத ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை உங்களிற்கு தெரியும். இன்று முதல் நாட்டின் ஒவ்வொரு அடிநிலமும் இலங்கையின் இறைமையுள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் அடிப்படையிலேயே ஆளப்படும் என நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து 2009 மே 19ம் திகதி நான் வெளியிடப்பட்ட இந்த பிரகடனத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

“சிங்க கொடியின் கீழ் ஒன்றுபட்ட மற்றும் பெருமைமிக்க தேசத்தின் ஜனாதிபதியாகவும், முப்படை தளபதியாகவும் நான் இந்த பிரகடனத்தை வெளியிட்டேன்.

“உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத குழுக்களில் ஒன்றை முற்றிலுமாக அழித்து, ஒவ்வொரு குடிமகனும், இந்த நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும், சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், சமஉரிமைகளுடனும் வாழக்கூடிய ஒரு தேசத்தை என்பது நம் அனைவராலும் நீண்டகாலமாக காணப்பட்ட ஒரு கனவாகும். ஒரு மக்கள் தலைவராக அது எனது தனிப்பட்ட கனவாகவும் காணப்பட்டது.

“2005ஆம் ஆண்டு நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவேளை விடுதலைப்புலி பயங்கரவாதிகள் தனிநாட்டிற்கான தயாரிப்பில் வடக்கு கிழக்கில் ஏற்கனவே நிர்வாக மையங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

“அவர்கள் எமது தாய் நாட்டின் மூன்றிலொரு பகுதியையும் கடற்கரையின் ஒரு பகுதியையும் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர். வடக்கில் உள்ள எங்களின் சொந்த தமிழ் பேசும் மக்களை அவர்கள் பயமுறுத்தி, பிணைக்கைதிகளாக மிரட்டி பிடித்து, அநியாயமாக வரிவிதித்து, இளைஞர்கள் பெண்களை, பாடசாலை மாணவர்களை தங்கள் அணிகளில் வலுக்கட்டாயமாக சேர்த்துக் கொண்டனர்.

“அவர்களின் தாக்குதல்கள் நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்கள், மத அரசியல் தலைவர்கள், பொதுமக்களை குறிவைத்தன. இறுதியில் மக்களின் தாகத்தை தணித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிற்கு நீர் வழங்கும் நீர்ப்பாசன நீரை கூட அவர்கள் தடுத்து வைத்திருந்தனர்.

“இது அவர்களின் தீவிரவாதத்தின் கொடுரமான அளவை காட்டுகின்றது. அவர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் அப்பாவி மக்களின் குருதிகளை சிந்தி, இலங்கைக்கான புதிய வரைபடத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

“உலகின் வல்லரசுகள் கூட பயங்கரவாதம் குறித்த அச்சத்தில் சிக்குண்டிருந்தவேளை, நான் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ள திட்டமிட்டேன் இது மனிதாபிமான நடவடிக்கை.

“கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்ற என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது.

“பிரம்டன் மேயர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார். யுத்தம் நடைபெற்றவேளை முப்படை தளபதியாக விளங்கியவன் என்ற அடிப்படையில் அதனை நான் முற்றாக மறுக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி