உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதிக சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மாகாணத்திற்கு ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 9 மாகாணங்களில், தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாகும்.

இதற்கு பங்களித்த பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் நாசா சமீபத்தில் வெளிப்படுத்திய செயற்கைக்கோள் தரவுகளுக்கமைய, இலங்கையின் தெற்குப் பகுதிகளும் மாலைத்தீவின் கிழக்கே உள்ள இந்தியப் பெருங்கடலும் உலகிலேயே மிகக் குறைந்த ஈர்ப்பு விசையை கொண்டுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, உலகின் செல்வந்தர்கள் தென் மாகாணத்திற்கு வருகை தருவதை ஊக்குவிக்க வேண்டும். அந்தப் பகுதியில் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதனை தெரியப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

குறைந்த ஈர்ப்பு விசை நிலைமைகளை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய தொழில்களை அந்தப் பகுதியில் நிறுவ வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான சரியான நேரம் இது என பேராசிரியர் இந்திரலால் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளிடையே ஆயுர்வேத, மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவ முறைகளை உள்ளடக்கிய சுகாதார சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2000-2002 மற்றும் 2011-2013ஆம் ஆண்டுகளுக்கான நாட்டின் வாழ்க்கை அட்டவணைகளில் வெளிப்படுத்தப்பட்ட ஆண் மற்றும் பெண் ஆயுட்காலம் குறித்த தரவுகளின் அடிப்படையில் பேராசிரியர் இந்த தகவலை வெளியிட்டார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி