மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதாக அறிவித்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 25 முதல் 30 சதவீதம் வரை மின் கட்டணத்தை அதிகரிக்கத் தயாராகி வருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக செயல்படுத்தப்படும் “உதகாமின் உதகாமட” திட்டத்தின் ஒரு பகுதியாக, கம்புருபிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.