புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருமாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவருக்கும், உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையே இன்று (15) காலை பாடசாலையில் வைத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உயர்தர மாணவர் சாதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவர் மீது கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குறித்த மாணவனுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி