கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த விசாரணைகள் நடைபெற்றுள்ளது.

கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக சிறுமி தவறான முடிவெடுத்து கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இறந்த சிறுமியின் தாயாரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் சிறுமியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை கல்பொத்த பகுதியில் கடந்த 29ஆம் திகதி தொடர்மாடி குடியிருப்பில் 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.

இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளதுடன், justiceforamshi என்ற வாசகமும் இணையத்தில் பரவலாக எல்லோராலும் பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி