கொழும்பு மற்றும் சனத்தொகை அதிகமாக உள்ள பிரதேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவரும்
பெருமளவானோர், நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்லாமல் இருந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்நாட்டின் தீர்மானமிக்க தேர்தல் அல்லாமை, அரசியல் மற்றும் தேர்தல் முறைமையின் மீது நம்பிக்கையின்மை, விரக்தி, வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான செலவைத் தாங்க முடியாமை, இந்தத் தேர்தல் தொடர்பில் போதிய அறிவின்மை மற்றும் தொடர்ந்து பல தேர்தல்கள் நடந்தமை போன்ற காரணங்களால், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து சுமார் 10 இலட்சம் பேர் வாக்களிக்கச் செல்லவில்லை என்று, மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.