வெசக் பூரணையை முன்னிட்டு, இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படும் இடங்கள்,
அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது மே மாதம் 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இறைச்சிக் கடைகள், பந்தய புக்கிகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகள் ஆகியவையும் அந்த நாட்களில் மூடப்பட வேண்டும் என்று அரசாங்க அறிவித்துள்ளது.