அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று உயர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு, முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.